ஹாசன், அக். 27: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் மைசூரு மண்டலத்தின் சார்பில் மைசூருகான்-2021 முதல் மாநாடு ஹாசனில் அக். 24-ஆம் தேதி நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அக். 24-ஆம் தேதி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் மைசூரு மண்டலத்தின் சார்பில் மைசூருகான்-2021 முதல் மாநாடு ஹாசனில் நடைபெற்றது. இதில் மைசூருகான்-2021 மாநாட்டின் தலைவர் பிந்து ஏ தாமஸ் கலந்து கொண்டு பேசியது: சமூகத்திற்கு ஒரு சேவையை வழங்குவதற்கான அற்புதமான கருத்தாக்கமாக மைசூருகான்-2021 மாநாட்டு விளங்குகிறது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், ரோபாட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் சிஸ்டம் மற்றும் அதன் பயன்பாடு, இயந்திர வடிவமைப்பு, மெட்டீரியல் டிசைன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான விஞ்ஞானிகளின் அனைத்து சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் முடிவுகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்குவதாகும். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களை சென்றடைய வேண்டும். மாநாட்டில் ஆய்வு வெளியீடுகளை மாணவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மைசூருகானுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் பரமேஷாச்சாரி, பெலகாவி விடியூவின் துணை வேந்தர் கரிசித்தப்பா, சாம்சாங் ஆய்வு பிரிவின் மூத்த அதிகாரி அலோக்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments