top of page
Search

அக். 2 ல் கர்நாடக மாநில தி.மு.க சார்பில் முப்பெரும் விழா

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Sep 23, 2022
  • 2 min read

பெங்களூரு, செப். 23: கர்நாடக மாநில தி.மு.க சார்பில் பெங்களூரில் அக். 2-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.


இது குறித்து மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக மாநில தி.மு.க சார்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 2) காலை 9.00 மணியளவில் பெங்களூரு இராமச்சந்திரபுரம் சாய்பாபா நகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் கட்சிக் கொடியை மாநில திமுக பொருளாளர் கே . தட்சிணாமூர்த்தி ஏற்றி வைக்கிறார். மாநில தி.மு.க அவைத் தலைவர் மொ.பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநில தி.மு.க அமைப்பாளர் இராமசாமி தலைமை வகிக்கிறார். முன்னிலை மாநில துணை அமைப்பாளர்கள் இராஜேந்திரன், குமுதா வகிக்கின்றனர். விழாவில் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிக்பெட் எம்.இராமன், கே.சிகாமணி, மைசூரு எஸ்.பிரான்சிஸ், இரா.அன்பழகன், முருகமணி செல்வம், முன்னாள் நிர்வாகிகள் இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, ஏ.டி. ஆனந்தராஜ் , கே.எஸ்.சுந்தரேசன் தங்கவயல் கு.ஆதித்தன், இரத்தின குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


கர்நாடக மாநில கழக முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக‌ அமைச்சர் பால்வளத்துறை சா.மு. நாசர், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், முன்னாள் எம்.எல்.ஏவும், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.செங்குட்டுவன், தமிழ்நாடு பாண்டிச்சேரி. கோவா மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும் எம்.எல்.ஏவுமான தினேஷ் குண்டுராவ், ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்தியா, திமுக வழக்கறிஞர்கள் அணி எம்.நடேஷ் , ஆர்.பாலாஜிசிங், இளைஞர் அணி நிர்வாகிகள் அமைப்பாளர் டி.சிவமலை, துணை அமைப்பாளர்கள்எம்.முருகானந்தம், தினேஷ், மு.பரசுராமன், இலக்கிய அணி நிர்வாகிகள் தலைவர் புலவர் முருகு தருமலிங்கம் செயலாளர் போர்முரசு கதிரவன், துணை செயலாளர் வன்னி மு.கோபால், சி.கண்ணன், வெள். செல்வகுமார், எம்.ஆர்.பழம்நீ. மகளிர் அணி நிர்வாகிகள் தலைவர் அம்மாயி ஜெயவேல், துணை அமைப்பாளர்கள் மங்கம்மாள் காயத்திரி, அமுதா பட்டுசாமி, பொருளாளர் சாந்தி, மணிமேகலை, தொ.மு.ச.பேரவை நிர்வாகிகள் தலைமை மத்தியக் குழு உறுப்பினர் மு.நாகப்பராஜன், மாநில தலைவர் மு.பொன்னம்பலம், மாநில செயலாளர்கள் த.திருமலை, து.பிரபு, செயலாளர் தயால் குமார், துணைத் தலைவர்கள் க.நாராயணசாமி, ஜி.குமார், காஞ்சி சிவசங்கர், ஜெயயால், கலைஞர் நூற்றாண்டு விழா மலர் முன்னோட்ட வெளியீடு விழாவில் பாவலர் ப.மூர்த்தி எழுதிய ''எழு ஞாயிறு எழுகவே" மலரை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் வெளியிடுகிறார்.


திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கர்நாடக மாநில தி.மு.க முப்பெரும் விழாவில் பெரியார் விருது மைசூரு திமுக அவைத் தலைவர் மைசூரு சூர்யா கணேஷ், அண்ணா விருது கர்நாடக மாநில திமுக முன்னாள் துணை அமைப்பாளர் தங்கவயல் சு.கலையரசன், கலைஞர் விருது எலஹங்கா கிளைச் செயலாளர் ஆற்காடு அன்பழகன், பேராசிரியர் விருது கர்நாடக மாநில திமுக துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், முரசொலி மாறன் விருது கர்நாடக மாநில திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் என்.எஸ்.கே.மணி, மு.க.ஸ்டாலின் விருது கர்நாடக மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் பத்ராவதி எல்.சிவலிங்கம், உதயநிதி ஸ்டாலின் விருது மாநில திமுக துணை அமைப்பாளர் மு.ராஜசேகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page