top of page
Search
Writer's pictureDhina mani

ஃபுஜிஃபில்ம் இந்தியா சார்பில் நவீன தொழில்நுட்ப சிடி, எம்ஆர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் அறிமுகம்


பெங்களூரு, மார்ச் 25: ஃபுஜிஃபில்ம் இந்தியா சார்பில் நவீன தொழில்நுட்ப சிடி, எம்ஆர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள‌ன.

பெங்களூரு லலித் அசோக் நட்சத்திர ஹோட்டலில் மார்ச் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் சங்கத்தின் 74-வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஃபுஜிஃபில்ம் இந்தியா சார்பில் நவீன தொழில்நுட்ப சிடி, எம்ஆர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஃபுஜிஃபில்ம் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கோஜி வாடா செய்தியாளர்களிடம் கூறியது: ஃபுஜிபிலிம் அதன் புதிய தயாரிப்புகள், சேவைகள் வரிசையின் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் மிகவும் துல்லியமான மருத்துவ இமேஜிங், ஸ்கிரீனிங்கிற்கான அணுகலைப் பெறுவார்கள். இது ஃபுஜிஃபில்ம் மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். தற்போது நாங்கள் ஒரு குழுவாக வலுவாக இருக்கிறோம், மேலும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நோயாளிகளின் நன்மைகளை அதிகப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். தடுப்பு மற்றும் நோயறிதல் துறையில், சந்தைத் தலைவராகவும், இந்திய சுகாதாரப் பாதுகாப்பு சமூகத்தின் முன்னணி விரிவான கூட்டாளராகவும் மாறுவதே எங்கள் லட்சியம் என்றார்.

ஃபுஜிஃபில்ம் தேசிய‌ மருத்துவப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் சந்தர் சேகர் சிபல் கூறியது: இமேஜிங் தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் நாங்கள், படத் தரம் மற்றும் பணிப்பாய்வுகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, அதிநவீன தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் வழங்க 'நெவர் ஸ்டாப்' என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எங்களின் நவீன தொழில்நுட்ப சிடி, எம்ஆர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் அறிமுகங்கள் மூலம், நோயறிதல் மற்றும் இமேஜிங் சேவைகளில் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை அனுபவிக்கும் தடைகளை மனதில் வைத்து, நோய் கண்டறிதல் சந்தையை மேம்படுத்துவதையும், மருத்துவ இமேஜிங் தகவல்களை சுகாதாரத் துறையிலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஃபியூஜிஃபில்ம் இந்தியா எப்போதும் தீவிரமான நோய்களை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பான அதிகபட்ச விழிப்புணர்வை பரப்புவதற்கு உழைத்து வருகிறது, நோய்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சையளிக்கலாம். எங்களின் முயற்சி தொடர்ந்து சுகாதார நோயறிதல் தரங்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. ஃபுஜிஃபில்ம் இந்தியா, முன்னோக்கிச் சிந்திக்கும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மருத்துவப் பராமரிப்பு வரிசையை உருவாக்குவதை மையமாகக் கொண்டுள்ளன. ஃபுஜிஃபில்ம் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ள கண்டறியும் தொழில்நுட்பங்களை வழங்க உறுதிபூண்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமையான திறன்கள் இதற்கு ஒரு சான்றாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ இமேஜிங்கில் தொழில்துறை முன்னோடியாக தனது நிலையை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது என்றார்.


48 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page